இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்தியர் – சுற்றிவளைத்த அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இந்தியாவில் இருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்து வகைகளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மருந்து வகைகளின் மொத்த பெறுமதி 25 இலட்சம் ரூபா ஆகும்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விமானம் மூலம் பல்வேறு மருந்து வகைகளைக் கொண்டு வந்து வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவர் ஆவார்.

சந்தேக நபர் இன்று அதிகாலை 04.30 மணியளவில் இந்தியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சங்கத்தின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட மருந்து வகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சந்தேக நபருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்