ஓய்வை அறிவித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 22 டெஸ்ட், 36 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரைசதங்களும் அடித்துள்ளார்.
அமித் மிஸ்ரா கடந்த 2003ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். இவர் கடைசியாக 2017ல் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் விளையாடினார்.
அமித் மிஸ்ரா ஓய்வு குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விளையாட்டு எனது முதல் காதல், எனது ஆசான், எனது மிகப்பெரிய மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்தது. பிசிசிஐ, அரியானா கிரிக்கெட் அமைப்பு, எனது பயிற்சியாளர்கள், சக வீரர்கள் மற்றும் எனக்கு வலிமை அளித்த ரசிகர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
எனது உயர்வுகளிலும் தாழ்வுகளிலும் உறுதியாக என் பக்கம் நின்றதற்கு எனது குடும்பத்தினற்கும் நன்றி. கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது என பதிவிட்டுள்ளார்.