வெளிநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியர்!
உகாண்டாவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தம் பண்டாரி 39 என்ற இந்தியர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். குறித்த நிறுவனத்தில் உகாண்டாவைச் சேர்ந்த இவான் வேப்வயர் என்ற காவல்துறை அதிகாரி கடன் வாங்கியிருந்தார்.
இந்நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பில் இம்மாதம் 12ஆம் திகதி அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து வேப்வயர் தன்னிடமிருந்த துப்பாக்கியால் பண்டாரியைச் சுட்டுக்கொன்றுள்ளார்.
துப்பாக்கிதாரியை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைகளில் வேப்வயர் பணியில் இல்லை எனவும், ஸ்டீவன் முலாம்போ என்ற சக அதிகாரியின் துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மனநலப் பிரச்சினை காரணமாக துப்பாக்கியை வைத்திருக்க வேப்வயருக்குக் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
https://twitter.com/i/status/1657227622605111299