சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் இந்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்று இறங்கினார்.
பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார்.
இந்தநிலையில், 2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும்,உடனடியாக நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நாளை காலை இந்தியா வந்திறங்குகிறார். தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான் மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார்.
இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
(Visited 14 times, 1 visits today)