ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை ரத்து செய்த இந்திய பிரதமர் மோடி
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாடுகளின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 13 முதல் 17 வரை குரோஷியா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
நோர்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நோர்வே செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த முடிவு குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





