பிரிக்ஸ் மாநாட்டிற்கு பிறகு டெல்லி வந்தடைந்த இந்திய பிரதமர் மோடி
கசானில் நடந்த 16 வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் ரஷ்ய பயணத்தை முடித்து டெல்லிக்குத் வந்தடைந்தார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களையும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது சந்தித்தார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யா மக்கள் மற்றும் அவர்களின் அரசாங்கத்தின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.





