கனடா மருத்துவமனையில் 8 மணி நேரம் காத்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மரணம்
கனடாவில்(Canada) உள்ள ஒரு மருத்துவமனையில் பல மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படாததால் 44 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 22ம் திகதி பணியில் இருந்தபோது கடுமையான மார்பு வலி இருப்பதாக தெரிவித்த பிரசாந்த் ஸ்ரீகுமார்(Prashanth Sreekumar), கனடாவின் எட்மண்டனில்(Edmonton) உள்ள கிரே நன்ஸ்(Grey Nuns) சமூக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், மூன்று குழந்தைகளின் தந்தையான பிரசாந்த் ஸ்ரீகுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக எட்மண்டன் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ளார்.
பின்னர், பல மணி நேரங்களுக்கு பிறகு சிகிச்சை பகுதிக்கு அழைக்கப்பட்டுள்ளார், அப்போது பிரசாந்த் ஸ்ரீகுமார் மார்பைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.





