சிங்கப்பூரில் பட்டாசு வெடித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் கைது

சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்ததற்காக 39 வயது இந்திய வம்சாவளி நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடை செய்யப்பட்ட பகுதியில் பட்டாசு வெடித்ததற்காக திலீப் குமார் நிர்மல் குமார் என்ற நபர் மீது வெடிபொருட்கள் மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம் 2021ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டாசு வெடித்த காணொளி இணையத்தில் வெளியிடப்பட்ட பிறகு திலீப் குமார் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் SGD $100,000 ($USD77,000) வரை அபராதம் விதிக்கப்படலாம்.
(Visited 3 times, 3 visits today)