தர பரிசோதனையில் தோல்வியை தழுவிய இந்திய மருந்துகள்!
2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் இருந்து வந்தவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது.
தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றயவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியா, உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் கூறினார்.
“எனினும், தரமற்ற மருந்து எதுவும் சந்தையில் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறோம்,” என்று அவர் உறுதிப்படுத்தினார். தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டன, அல்லது நிறுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.