மனைவிக்கு நகை வாங்கிக் கொடுத்த இந்தியருக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – ஒரே இரவில் கோடீஸ்வரரான யோகம்!
சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 24) நடந்த அதிர்ஷ்டக் குலுக்கல் முறையில் 1 மில்லியன் டாலர் (ரூ.8.45 கோடி) பெரும் பரிசை இந்திய வம்சாவளி ஒருவர் வெற்றிப்பெற்றுள்ளார்.
பாலசுப்ரமணியன் சிதம்பரம் என அடையாளம் காணப்பட்ட நபர், மூன்று மாதங்களுக்கு முன்பு அதிர்ஷ்ட குலுக்கல் நடத்திய கடையில் தனது மனைவிக்கு தங்கச் சங்கிலியை வாங்கிக் கொடுத்து முதலிடம் பெற்றார்.
குறிப்பாக, அதிர்ஷ்ட குலுக்கல்லில் பங்கேற்க தகுதி பெற, வாடிக்கையாளர்கள் நகைகளுக்கு ரூ.15,786க்கு மேல் செலவிட வேண்டும். சிதம்பரம் தனது மனைவிக்கு 3.7 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை வாங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே அவர் குறித்த அதிர்ஷடக் குலுக்கலில் வெற்றிப் பெற்றுள்ளார்.
https://x.com/SGinIndia/status/1862723804637851698?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1862723804637851698%7Ctwgr%5Ec1efd0f4394ee01e9e938311ff729c5736f22731%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Findian-origin-man-pockets-rs-8-45-crore-lottery-after-buying-jewellery-for-wife-7139570