சிங்கப்பூர் விமான நிலையத்தில் இந்தியர் செய்த மோசமான செயல்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் கடையிலிருந்து திருடிய சந்தேகத்தில் 25 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 23ஆம் திகதியன்று விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தில் இருக்கும் கடையிலிருந்து கழுத்துப் பட்டையில் போடப்படும் கிளிப் காணாமல்போனதாகக் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.
அதன் மதிப்பு 480 வெள்ளி என தெரிவிக்கப்படுகின்றது. அந்த அதனைத் திருடியது CCTV கமராவில் பதிவானது.
அவரது அடையாளம் நிர்ணயிக்கப்பட்டாலும் அவர் சிங்கப்பூரைவிட்டுக் கிளம்பிவிட்டார். அதன் பின்னர் 28ஆம் திகதியன்று அவர் சிங்கப்பூருக்குத் திரும்பியபோது சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து களவாடப்பட்ட பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பொருளைத் திருடியதாக நபர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரையிலான சிறை, அபராதம், அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.