இந்தியா செய்தி

ரஷ்யா சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷியாவுக்கு சென்றார். மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் இரு தரப்பு விவகாரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இரு நாடுகளின் உறவுகள், குறிப்பாக வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாட்டு மந்திரிகளும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

மேலும் ரஷிய தொழில், வர்த்தகத் துறை மந்திரியுமான டெனிஸ் மாந்த்ரோவையும் சந்தித்து பொருளாதார ஈடுபாடு குறித்த விஷயங்கள் பற்றியும் பேசுகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது மந்திரி ஜெய்சங்கர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கும் செல்ல உள்ளார் என்று தகவல்கள் தெரியவருகிறது.

“ரஷிய மூலோபாய சமூகத்தின் முன்னணி பிரதிநிதிகளுடன் ஒரு திறந்த மற்றும் முன்னோக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. மறுசீரமைப்பின் முக்கியத்துவம் மற்றும் பன்முகத்தன்மையின் தோற்றம் பற்றி பேசினோம்” என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டார்,

 

(Visited 18 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி