இந்திய நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு சற்றுமுன்னர் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இருதரப்பு கலந்துரையாடலுக்கான இந்திய தூதுக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.





