இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மாற்றமா? கங்குலி பதில்
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணித் தலைவரை மாற்றவேண்டும் என்கிற சமூக வலைதள சர்ச்சைக்கு கங்குலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்வியை அடுத்து, இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட்டை மாற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரிதும் கூறி வந்தனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி இரண்டாவது முறை தகுதி பெற்றும் கூட ஐசிசி டெஸ்ட் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில், தங்கள் உணர்வு பூர்வ கருத்துக்களை தெரிவித்து வந்தனர், அதில் பலரும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்பது தான்.
கடந்த 2021 ஆம் ஆண்டு டி-20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியனின் கேப்டனாக அவர்கள் சர்மா மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றனர், அன்று முதல் தற்பொழுது வரை இந்திய அணிக்கு இருவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது, இருந்தும் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல முடிய வில்லை என்பது வருத்தம் தான்.
2013 ஆம் ஆண்டு இந்திய அணி தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வென்றதன் பிறகு இந்திய அணியால் ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை. ரோஹித் சர்மா கேப்டனாக பதவியேற்ற பின்பு இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என வரிசையாக தோல்வியடைந்து வந்துள்ளது.
இந்த நிலையில் முன்னால் பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில் சமூக வலைதள கேப்டன் சர்ச்சை குறித்து கேட்கப்பட்டபோது, இது இந்திய தேர்வு குழுவினரின் வேலை மற்றும் இது ஒரு மிகப்பெரிய பணியாக நான் கருதுகிறேன். இதில் எப்படி சமூக வலைதள சர்ச்சைகள் நுழைய முடியும்.
கேப்டன் தேர்வு போன்ற முடிவுகளை நாம் சமுக வலைதள சர்ச்சைகளால் எடுத்து விட முடியாது. மேலும் ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை இந்த வருட இறுதியில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடங்களுக்கு முன்பு விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சி பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணிக்கு சரியான ஒரு தேர்வாக ரோகித் சர்மா இருந்தார்.
என்னை பொறுத்தவரை இந்திய அணியின் கேப்டன் யார் என்று நீங்கள் கேட்டால் நான் ரோஹித் சர்மா என்று தான் கூறுவேன் மேலும் ராகுல் டிராவிட் உடனும் நான் விளையாடி இருக்கிறேன். உலக கோப்பை தொடர் வர இருப்பதால் இருவரும் அது வரையாவது கேப்டன் மற்றும் பயிற்சியாளர் பதவியில் தொடர வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.