UKவில் பெண்சிசுக்களை கருக்கலைப்பு செய்யும் இந்திய தம்பதியர்!
பிரித்தானியாவில் சமீபகாலமாக கருக்கலைப்பு செய்யும் பெண்களின் வீதம் அதிகரித்து வருவதாக புதிய கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்தியப் பெண்கள் மத்தியில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருகலைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய தொண்டு நிறுவனமொன்று, பாலின ரீதியாக கருகலைப்பு செய்வது சட்டவிரோதமானது அல்ல எனக் கூறுகிறது. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
பிரித்தானியாவில் வசிக்கும் இந்திய பெண்கள் ஆண்குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், இதனால் ஸ்கேன் பரிசோதனைகளை தொடர்ந்து கருகலைப்புகளை முன்னெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் பாலினத்தின் அடிப்படையில் 400 சிறுமிகளைக் கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஆனால் பிரித்தானிய சட்ட விதிகளின் அடிப்படையில் பாலினத்தின் அடிப்படையில் மட்டும் கருக்கலைப்பு செய்வது சட்டவிரோதமானது. கருக்கலைப்புச் சட்டத்தின் கீழ் பாலினம் ஒரு சட்டப்பூர்வமான காரணம் அல்ல.’ எனக் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.





