இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஐ.சி.சியின் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நடத்தை விதிகளை மீறிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை போட்டியில், அவர்கள் விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்குப் பிறகு, போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இரு வீரர்களுக்கும் போட்டிக் கட்டணத்தில் 30 சதவீதத்தை அபராதம் விதித்துள்ளார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை இந்திய ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணித்தல் குறித்து பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யிடம் முறைப்பாடு அளித்திருந்தது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





