உலகின் முன்னணி உயர் IQ சமூகமான மென்சாவில் இணைந்த இந்திய சிறுவன்!
தெற்கு லண்டனைச் சேர்ந்த 11 வயது சிறுவன் மென்சாவின் புதிய உறுப்பினர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Suttonஇல் உள்ள ராபின் ஹூட் ஜூனியர் பள்ளியில் படிக்கும் துருவ், ஏப்ரல் மாதம் 162 புள்ளிகளை பெற்ற பின்னர் உயர்ந்த IQ உள்ளவர்களுக்கான சமூகத்தில் சேர்ந்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள் அவரது தந்தை பிரவீன் குமார், ஒரு குடும்பமாக நாங்கள் அவரை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறோம். நாங்கள் அதிர்ஸ்டசாலி எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அவர் 02 ஆம் வகுப்பில் படிக்கும்போது மிகவும் பின்தங்கிய மட்டத்தில் இருந்தார். ஆசிரியர்கள் அவர் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்று கூறினார்கள். அவருடைய வாழ்வை நினைத்து நான் உள்ளுக்குள் அழுதுகொண்டிருந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அங்கீகரிக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் பொது மக்கள் தொகையில் முதல் 2%க்குள் மதிப்பெண் பெற்றவர்களை மென்சா ஏற்றுக்கொள்கிறது.
மென்சா என்றால் என்ன?
1946 இல் நிறுவப்பட்ட மென்சா, உலகம் முழுவதும் 140,000 பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு தன்னை “உலகின் முன்னணி உயர் IQ சமூகம்” என்று விவரிக்கிறது.