வங்கதேச படுகொலைகளை ஆதரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இந்தியர் கைது
வங்கதேசத்தில்(Bangladesh) இந்து இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதற்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறி அசாமின்(Assam) கம்ரூப்(Kamrup) மாவட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய பஜ்ரங்(Rashtriya Bajrang) மற்றும் சர்வதேச இந்து பரிஷத் பஜ்ரங்(International Hindu Parishad Bajrang) அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர், கும்பல் படுகொலையின் வீடியோவை வெளியிட்டதாகவும், குற்றத்திற்கு ஆதரவாக பேஸ்புக்(Facebook) மற்றும் இன்ஸ்டாகிராமில்(Instagram) ஒரு பதிவை வெளியிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி
வங்கதேசத்தில் இந்து நபர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது





