மங்கோலியா இராணுவத்துடன் இணைந்து இந்திய இராணுவ வீரர்கள் பயிற்சி

இந்தியா இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதன்படி, இந்தியாவுக்கும் மங்கோலிய இராணுவத்துக்கும் இடையிலான 16ஆவது கூட்டு இராணுவப் பயிற்சி நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
“Nomadic Elephant” என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சி இந்தியாவின் மேகாலயாவில் உள்ள உம்ரோயில் நடைபெற உள்ளது.
இந்த இராணுவப் பயிற்சி ஜூலை 16ஆம் திகதி வரை தொடரும் என இந்திய இராணுவம் அறிவிக்கிறது, மேலும் இது மங்கோலியாவுடனான வழக்கமான இராணுவப் பயிற்சி என்று ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 17 times, 1 visits today)