விளையாட்டு

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா விலகல்?

வளர்ந்து வரும் மகளிர் அணிகள் பங்​கேற்​கும் ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடர் அடுத்த மாதம் இலங்​கை​யில் நடை​பெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் செப்​டம்​பர் மாதம் ஆடவருக்​கான ஆசிய கோப்பை டி 20 கிரிக்​கெட் தொடர் இந்​தி​யா​வில் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் இந்த இரு தொடர்​களில் இருந்​தும் இந்​திய அணி வில​கி​யுள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகின.

ஆப​ரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை தொடர்ந்து பாகிஸ்​தானுடன், கிரிக்​கெட் போட்​டிகள்விளை​யாடுவதை தவிர்க்​கும் பொருட்டு இந்த நடவடிக்​கையை பிசிசிஐ எடுத்​துள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாயின. ஆசிய கிரிக்​கெட் கவுன்​சிலின் தலை​வ​ராக தற்​போது பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலை​வர் மொஹ்சின் நக்வி உள்​ளார். இவர், பாகிஸ்​தான் அரசாங்​கத்​தின் உள்​துறை அமைச்​ச​ராக​வும் உள்​ளார். இதன் காரண​மாகவே பிசிசிஐ, ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலக முடிவு செய்​துள்​ள​தாக​வும் அதி​காரப்​பூர்​வ​மற்ற தகவல்​கள் வெளி​யாயின.

இந்​நிலை​யில் ஆசிய கோப்​பை​யில் இருந்து இந்​திய அணி வில​கு​வ​தாக வெளி​யான தகவல்​களை பிசிசிஐ செய​லா​ளர் தேவஜித் சைகியா மறுத்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர், வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஆசிய கோப்பை அல்​லது வேறு எந்த ஆசிய கிரிக்​கெட் கவுன்​சில் நிகழ்வு தொடர்​பாக​வும் நாங்​கள் விவா​திக்​க​வும் இல்​லை, எந்த நடவடிக்​கை​யை​யும் எடுக்​க​வில்​லை. இந்த சூழ்​நிலை​யில் எங்கள் கவனம் ஐபிஎல் மற்​றும் அதைத் தொடர்ந்து வரும் இங்​கிலாந்து தொடர்​களில் மட்​டுமே உள்​ளது” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
Skip to content