மாலத்தீவில் இருந்து படைகளை திரும்பப் பெற ஆரம்பிக்கும் இந்தியா
மாலத்தீவில் அதிபர் முகமது முய்சு தலைமையில் மக்கள் தேசிய காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இவர் ஆட்சியை பிடிப்பதற்கு முன்னரே மாலத்தீவில் நம் நாட்டு ராணுவ வீரர்கள் முகாம் அமைத்துள்ளனர்.
அதிபராக பதவியேற்றவுடன் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டார். கடந்த மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய முகமது முய்சு, மாலத்தீவு விவகாரங்களில் தலையிடவோ, அதன் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ எந்த நாட்டையும் இனி அனுமதிக்க முடியாது.
3 விமான தளங்களில் ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 10-ம் தேதிக்குள் வெளியேற்றப்படுவர். மற்ற 2 விமான தளங்களில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் மே 10-ம் தேதிக்குள் வெளியேறிவிடுவார்கள்.
இந்நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு படிப்படியாக வெளியேறத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. மே 10-ம் தேதிக்குள் இந்திய ராணுவம் முழுமையாக வெளியேற உள்ளது.