3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணையை சோதனை செய்த இந்தியா!
அணுசக்தி திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஒரு இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா சோதனை செய்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை விசாகப்பட்டினம் கடற்கரையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாட்டில் (INS Arighaat) இருந்து கே-4 ஏவுகணை சோதனை செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3,500 கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை கடல் சார்ந்த அணுசக்தி தாக்குதல் திறனுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிப்பதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
கே-4 நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை (SLBM) ஆகஸ்ட் 29, 2024 அன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம் இந்தியா நிலம், வான் மற்றும் கடலுக்கடியில் இருந்து அணு ஏவுகணையை ஏவக்கூடிய நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.





