10 ஆம் திகதி முதல் இந்திய – இலங்கை படகு சேவை ஆரம்பம்
காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு பயணிகள் படகு சேவை வரும் 10ம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.
அதற்காக செரியபாணி என்ற கப்பல் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், அதன் சோதனை நிலை ஓட்டம் இன்றும் நாளையும் நடத்தப்படும் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கப்பலை உருவாக்க இந்தியா 25 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும், இது மணிக்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செரியபாணி கப்பலில் 14 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர். இதில் 150 பயணிகள் பயணிக்க முடியும்.
கப்பலில் உணவு மற்றும் பானங்களை வாங்க முடியும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு வழி பயணத்திற்கு 27,000 ரூபாயும், இரு வழி பயணத்திற்கு 53,500 ரூபாயும் வசூலிக்கப்படும்.
மேலும், ஒருவர் 40 கிலோ சரக்குகளை கொண்டு செல்ல முடியும். நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு செல்ல மூன்று மணி நேரம் ஆகும்.