இந்தியா

அமெரிக்காவின் வரியால் இந்தியாவிற்கு 4.2 இலட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட வாய்ப்பு!

அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக விதித்துள்ள 50 சதவீத வரி இன்று (27.08) முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில்  50 சதவீத வரி  காரணமாக இந்தியாவின்  4.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள்,  ‘மருந்துகள், மின்னணு சாதனங்கள், பெட்ரோலியம் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பில் இருந்து விலக்கு தொடரும். அதே நேரம், இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளர் சார்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, அமெரிக்கச் சந்தைகளில் இருந்து இந்திய பொருள்கள் வெளியேற்றப்பட்டு, அமெரிக்காவின் குறைந்த வரி விதிப்பு சலுகையைப் பெற்ற இந்தியாவின் போட்டியாளர்களான வங்கதேசம், வியட்நாம், இலங்கை, கம்போடியா, இந்தோனேஷியா நாடுகளின் பொருள்களுக்கு வரவேற்பு பெருகும்.

இதனால், இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது’ எனத் தெரிவித்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே