இந்தியா : காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவு – 11 பேர் உயிரிழப்பு, 30 பேர் மாயம்!
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
நிலச்சரிவில் நாட்டில் ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் 30 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





