இந்தியா

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை கப்பலை வியட்நாமுக்கு பரிசளிக்கிறது இந்தியா

ஏவுகணையை ஏந்திச் செல்லும் ரோந்து கப்பலான ஐஎன்எஸ் கிர்பான்-ஐ, வியட்நாமுக்கு இந்தியா பரிசாக வழங்க உள்ளது.

இரண்டு நாள் பயணமாக நேற்று புதுடெல்லி வந்த வியட்நாம் பாதுகாப்புத் துறை அமைச்சர் பான் வான் கியாங், ராஜ்நாத் சிங்கை இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளின் பாதுகாப்புத்துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், “கடந்த ஆண்டு ஜூன் மாதம் நான் வியட்நாம் வந்தபோது, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தளவாட ஆதரவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கூட்டு தொலைநோக்கு அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த கூட்டு தொலைநோக்கு அறிக்கை, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் விரிவான வழிகாட்டி ஆவணமாக உள்ளது.

இந்த அறிக்கை நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தையும் அளவையும் மேம்படுத்தி உள்ளது. இது எதிர்காலத்திற்கான பாதையை அமைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சகம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கிர்பான், வியட்நாமுக்கு பரிசாக வழங்கப்படும் என ராஜ்நாத் சிங் அறிவித்தார் என்றும் தெரிவித்துள்ளது.

 

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே