இந்தியா: டாடா ஐபோன் உதிரிபாக ஆலையில் தீ விபத்து!நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை
தென்னிந்தியாவில் உள்ள ஒரு முக்கிய டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், குறைந்தது 10 பேர் மருத்துவ சிகிச்சை பெற்றனர், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலையில் எதிர்ப்பாராத விதமாக ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திறந்த வெளி என்பதால் காற்று பலமாக வீசியதன் விளைவாக, ஆலை முழுவதும் மளமளவென வேகமாக தீ பரவியது. இதனை கண்டதும் ஆலையில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
கொழுந்து விட்டு எர்ந்த தீயால் பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனிடயே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. தற்போது வரை ஆலையில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றே கூறப்படுகிறது.
தீ விபத்து தொடர்பாக டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் ஓசூரில் உள்ள எங்கள் ஆலையில் துரதிருஷ்டவசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் உள்ள எங்கள் அவசரகால நெறிமுறைகள் எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தன. தீ விபத்துக்கான காரணம் தொடர்பான விசாரணை உள்ளது, எங்கள் ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்” என தெரிவித்துள்ளது.