இந்தியா

இந்தியா: தேநீர் தர மறுத்த மருமகள்… கழுத்தை நெரித்து கொலை செய்த மாமியார்!

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மோமின்பேட்டையைச் சேர்ந்தவர் அஜ்மீரா பேகம்(28). இவருக்கும் ஆட்டோ ஓட்டுநரான முகமது அப்பாஸ்க்கும் 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு ஆறு வயது மகளும், எட்டு வயது மகனும் உள்ளனர். அஜ்மீரா குடும்பத்தினருடன் அப்பாஸின் தாய் ஃபர்சானா பேகம்(53) வசித்து வந்துள்ளார்.

கடந்த 15 நாட்களாக மாமியார் மற்றும் மருமகள் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், தனது மருமகள் அஜ்மீரா பேகத்திடம் தேநீர் தயாரித்து தருமாறு ஃபர்சானா பேகம் நேற்று கேட்டுள்ளார்.

Hyderabad News | Mother-in-Law Allegedly Murders Daughter-in-Law Over Tea  Dispute in Hassan

ஆனால், தேநீர் போட்டுத் தரமுடியாது என்று அஜ்மீரா மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பின் அஜ்மீரா சமையலறைக்குப் போய் விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஃபர்சானா, அஜ்மீரா பேகத்தின் பின்னால் சென்று தாவணியால் அவரது கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மூச்சுத்திணறி அஜ்மீரா பேகம் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அத்தாப்பூர் காவல் நிலைய பொலிஸார், விரைந்து வந்து அஜ்மீரா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாக ஃபர்சானா பேகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content