பாகிஸ்தானை வீழ்த்தி 2025ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பையை வென்ற இந்தியா
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்திய செய்த பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. பர்ஹான் 57 ஓட்டங்களும் பகர் சமான் 47 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.
இதையடுத்து 147 ஓதனால் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. சிறப்பாக ஆடி வந்த அபிஷேக் சர்மா 5 ஓட்டங்களுக்கும் சூர்யகுமார் யாதவ் ஒரு ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 69 ஓட்டங்களும் சஞ்சு சாம்சன் 24 ஓட்டங்களும் இறுதியில் துபே 33 ஓட்டங்களும் பெற்று இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இறுதியில், இந்தியா 19.4 ஓவரில் 150 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.





