யாழில் அதிகரித்து வரும் தற்கொலை சம்பவங்கள்!

கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸாரின் புள்ளிவிபரம் ஊடாகவே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, யாழ்ப்பாணத்தில் 175 பேர் தவறான முடிவை எடுத்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
அதேபோல் இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான கால பகுதியில் 54 பேர் உயிர் மாய்த்துள்ளனர். அவர்களில் இருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள்.
இந்நிலையில், தமது உயிரை மாய்க்க முற்படுவது தண்டனைக்கு உரிய குற்றம் என பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)