இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் வருடாந்தம் குறைந்தது 5,000 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு போதைப்பொருள் முக்கிய காரணியாக உள்ளது என்றார்.
மேலும், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்தப்படும் ஆயுதமாக கையடக்கத் தொலைபேசிகள் மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேல் மாகாணத்தை பொறுத்தமட்டில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சிறுவர் குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.