தென் சீனக் கடல் பகுதியில் அதிகரித்துள்ள பதற்றம்!
தென் சீனக் கடலில் “மிதக்கும் தடுப்பு” அமைப்பது தொடர்பாக சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
சீன கடலோர காவல்படை “மிதக்கும் தடையை” நிறுவியுள்ளது. இதனால் பிலிப்பைன்ஸ் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலையை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் சீனக் கடல் எல்லை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே மோதல்கள் நிலவி வந்த நிலையில் இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ளது.
Bajo de Masinloc பகுதி மீன்களுக்கு பெயர் பெற்றது. இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளை சீனா அழிப்பதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் முன்பு குற்றம் சாட்டினர். ஆனால் சீனா இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
(Visited 18 times, 1 visits today)





