இலங்கை

டெங்குநோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்,  56,228 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதாகவும்,  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதில் 27, 883 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் எனவும்,  அதிகூடிய டெங்கு நோயாளர்கள்,  கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 12 ஆயிரத்து 154 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டின் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்