இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் அறிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சிய சந்தைகளில் ஏற்பட்ட வலுவான வணிக இலாபத்தினால் ஏற்பட்டதாகவும், எதிர்பார்த்ததை விட அதிகமான மதிப்பில் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
2025 ஜூன் மாதத்தில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி 23.1% உயர்வு பெற்றது. இங்கிலாந்திற்கான ஏற்றுமதி 20.4% அதிகரித்தது.
இதனடிப்படையில், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி 8.95 சதவீதம் அதிகரித்துள்ளதாக மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வளர்ச்சி, உலக சந்தையில் மீண்டும் இடம்பிடிக்க இலங்கை ஆடைத் துறை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கான சிறந்த சான்றாகவும் கருதப்படுகிறது.