நீதிமன்றங்களில், இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் உள்ளன
இந்நாட்டு நீதிமன்றங்களில் உள்ள சுமார் 20,075 வழக்குகள் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் என நாடாளுமன்றத்தில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூலை 31ஆம் திகதி வரை, உயர் நீதிமன்றங்களில் 7,495 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் 12,580 சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2,751 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 2021 இல் 11,187 முறைப்பாடுகளும், 2022 இல் 10,497 முறைப்பாடுகளும், 2023 இல் 9436 முறைப்பாடுகளும், 2024 ஏப்ரல் 30, வரை 2,571 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க வழங்கிய பதில்களை வழங்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சிறுவர் துஷ்பிரயோகம் காரணமாக 6587 சிறுமிகளும் 1694 ஆண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.