இலங்கையில் ஓய்வு பெற்ற வைத்தியர்களை சேவைக்கு அழைக்கும் அரசாங்கம்!

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைத் தேடி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதனால், பல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.
(Visited 10 times, 1 visits today)