ஐரோப்பா

விரக்தியில் காதலியுடன் இணைந்து மகளின் உடலில் பாதரசத்தை செலுத்திய ஜேர்மானியர்!

மனைவி விட்டு விட்டுச் சென்ற ஆத்திரத்தில், மகள் உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திய ஜேர்மானியர் ஒருவருக்கும் அவரது காதலிக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியிலுள்ள Springe என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு 30 வயது நபர், ஒரு வயதே ஆன தனது மகள் உடலில், ஊசி மூலம் பாதரசத்தை ஏற்றியுள்ளார்.அந்தக் குழந்தை பிறந்ததும் அதன் தாய் தன்னைப் பிரிந்து சென்றதால், அந்தப் பெண்ணைப் பழிவாங்க, அந்தப் பிஞ்சுக் குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடல் முழுவதும் கொப்புளங்களுடன் அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளுக்கு என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கண்டுபிடிக்கமுடியாமல் போயுள்ளது.மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகே, அவளது உடலில் பாதரசம் ஏற்றப்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

Mercury | Definition, Uses, Density, & Facts | Britannica

குழந்தை உடலில் பாதரசத்தை ஏற்றியதை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், பின்னர் அந்த நபரும், அவரது புதுக்காதலியான 34 வயது பெண்ணொருவரும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.பாதரசத்தை ஏற்றுவதால் உடனடியாக உயிர் போகாது என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், அந்தக் குழந்தைக்கு மரண வலியை ஏற்படுத்தவே தாங்கள் அப்படிச் செய்ததாகவும் இருவரும் பின்னர் விசாரணையில் தெரிவித்துள்ளார்கள்.

அந்தக் குழந்தையின் தந்தைக்கு 13 ஆண்டுகளும், அவரது காதலிக்கு 12 ஆண்டுகளும் சிறைந்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்