சீனாவில் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு பாதிப்பு!
சீனாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்குத் திருமணங்கள் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு 6.83 மில்லியன் தம்பதிகள் திருமணத்தைப் பதிவுசெய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் விவகார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 800,000 குறைவாக பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகவே திருமணங்களின் பதிவு எண்ணிக்கை குறைகிறது. எனினும் கொரோனா தொற்றுச் சூழலில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கங்கள் காரணமாக அந்த எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அத்துடன் சீனாவின் பிறப்பு விகிதமும் மக்கள்தொகையும் குறைகின்றன. 60 ஆண்டுகளில் முதல்முறையாகக் கடந்த ஆண்டு மக்கள்தொகை குறைந்தது.
பிறப்பு விகிதம் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 6.77 எனக் குறைந்தது. திருமணங்களை ஊக்குவித்துப் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க 20க்கும் அதிகமான நகரங்களில் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளதாகச் சீனா கூறியுள்ளது.