பிரித்தானியாவில் அண்டை வீட்டாரை தொந்தரவு செய்தால் 5000 பவுண்ட்ஸ் அபராதம்!

பண்டிகை காலம் விரைவில் நெருங்கி வருவதால், பல பிரித்தானியர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தங்கள் வீடுகளை அலங்கரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிலர் சட்டத்தை மீறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது அண்டை வீட்டாரை தொந்தரவு செய்வதுபோல் நடந்துகொள்வதாக தெரியவந்துள்ளது.
விளக்குகளை ஏற்றி, ஊதப்பட்ட கலைமான்களால் உங்கள் தோட்டத்தை அலங்கரிப்பது பாதிப்பில்லாத வேடிக்கையாகத் தோன்றினாலும், அது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1990ஐ மீறுவதாக இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறாக சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு 5000 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
(Visited 21 times, 1 visits today)