2023ல் தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்ற 2500க்கும் அதிகமானோர் பலி
இந்த ஆண்டு இதுவரை 2,500 க்கும் மேற்பட்டோர் மத்திய தரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றபோது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் ஏறக்குறைய 186,000 பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு வந்துள்ளனர் என்று ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (UNHCR) பணிப்பாளர் Ruven Menikdiwela ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மத்தியதரைக் கடலைக் கடந்த 186,000 பேரில் 83 சதவீதம் பேர்,சுமார் 130,000 பேர் இத்தாலியில் தரையிறங்கினர்.
கிரீஸ், ஸ்பெயின், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகியவை மத்திய தரைக்கடலைக் கடந்து மக்கள் தரையிறங்கிய பிற நாடுகளில் அடங்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அபாயகரமான கடற்பகுதியின் போது இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
“செப்டம்பர் 24 க்குள், 2023 இல் மட்டும் 2,500 க்கும் அதிகமானோர் இறந்தவர்கள் அல்லது காணாமல் போயுள்ளனர்” என்று மெனிக்டிவெல கூறினார்.