அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

உலகளவில் பெரும்பலோனரால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செய்திகளை அனுப்புவதற்கும், மற்றோர்களை தொடர்பு கொள்வதற்கும் மக்கள் WhatsApp பயன்படுத்தி வருகிறார்கள்.

இத்தகைய WhatsAppஇல் பயனர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே, WhatsApp பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து சர்வதேச எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

மக்கள் எந்த நாட்டிலிருந்தும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் WhatsAppஇல் அழைப்புகளைச் செய்துகொள்ள வசதிகள் உள்ளது. இது மோசடி செய்பவர்களுக்கு எளிதாக்கியுள்ளது. வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைப்பைப் பெறும்போது பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்தாலும், அழைப்பாளர்கள் யார் என தெரியவேண்டும் என்பதற்காக அழைப்பை எடுத்து பேச தொடங்கியுள்ளனர்.

இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம். ஏனென்றால், பல சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய தகவலை பெற முயற்சி செய்கிறார்கள். அத்தகைய வெளிநாட்டு எண்களில் இருந்து இருந்து அழைப்புகள் வந்தால் எந்த தனிப்பட்ட தகவலையும் வெளியிடக்கூடாது.

ஒரு சர்வதேச எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அது அந்த நாட்டைச் சேர்ந்தது என்று அர்த்தமல்ல என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்