அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதனடிப்படையில் உரிய விடுப்பு எடுக்கும் அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்லவோ அல்லது இந்நாட்டில் தங்கவோ வாய்ப்பு கிடைக்கும்.
அந்தந்த விடுமுறையை எடுக்கும்போது அவர்களின் மூப்பு அல்லது ஓய்வூதியத்திற்கு எந்தத் தடையும் இருக்காது என்றும் பொது நிர்வாக அமைச்சகம் தெரிவிக்கிறது.
(Visited 11 times, 1 visits today)





