ஜெர்மனியில் கடவுச்சீட்டு, அடையாள அட்டை பெற காத்திருக்கும் மக்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் அடுத்தாண்டு முதல் டிஜிட்டல் நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுவதால், கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையைப் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் புதிய நடைமுறை கட்டமாயக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடவுச்சீட்டு உட்பட முக்கிய ஆவணங்களை பெற அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மே முதல், ஜெர்மன் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் குடியிருப்பாளர்கள் டிஜிட்டல் கடவுச்சீட்டு புகைப்படத்தை சமர்ப்பிக்க முடியும்.
கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை அமைப்பில் நிர்வாக நடைமுறையை குறைத்து டிஜிட்டல் மயமாக்கலை முன்னோக்கி செலுத்துவதே இதன் நோக்கமாகும்
ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டையை விரைவாகப் பெறுவது மற்றும் நிர்வாக நடைமுறை குறைவாக இருக்கும். அதற்கமைய, பயோமெட்ரிக் கடவுச்சீட்டு புகைப்படங்கள் எதிர்காலத்தில் டிஜிட்டல் மயமாக்கப்படும், காகிதத்தில் புகைப்படங்கள் இனி அனுமதிக்கப்படாது.