இலங்கை

இலங்கை: உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

வட்டி வருமானத்தின் மீதான நிறுத்தி வைக்கும் வரி தொடர்பாக பரப்பப்படும் தகவல் உண்மைக்குப் புறம்பானதென உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வட்டி வருமானத்தின் மீது நிறுத்தி வைக்கும் வரிக்கு உட்பட்ட ஆனால் வரி விதிக்கக்கூடிய வருமானம் இல்லாத தனிநபர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சுய அறிவிப்புக்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி எனத் தெரிவித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது.
 எனினும் அவ்வாறான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய வைப்புத் தொகைகளுக்கு வட்டி செலுத்தல்களைப் பெறுவதற்கு முன்பு நிறுத்தி வைக்கும் வரி விலக்கு கோரும் பிரகடனத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிவிப்பை சமர்ப்பிக்க TIN என்ற வரி செலுத்துவோர் அடையாள எண் அவசியமில்லை என்றும் உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்