இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் நீண்ட வரிசைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இ-பாஸ்போர்ட் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொரிய மொழி புலமை பரீட்சை காரணமாக வரிசைகள் அண்மையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண, கொரிய அரசாங்கத்துடன் ஒரு முறையை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும், தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர், நாட்டின் பல்வேறு துறைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் தெரிவித்தார்.
புதிய தேசிய அடையாள அட்டைகளை (NIC) ஆட்கள் பதிவு திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்