இலங்கை அரச நிறுவனங்களுக்கு அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவித்தல்!
இலங்கையில் அரசு நிறுவனங்களில் தேசியக் கொடியை ஏற்றவும், கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இம்மாதம் 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மற்றும் நாளை அரசு நிறுவனங்களின் கட்டிடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் என அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
(Visited 52 times, 1 visits today)




