சிங்கப்பூரில் வீடுகளில் அமுலாகும் நடைமுறை!
சிங்கப்பூரில் எல்லா வீடுகளிலும் மின்சார அதிர்வைத் தடுக்கும் சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கசிவு ஏற்படும்போது மின்சாரம் தாக்காமல் அந்தச் சாதனம் தடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் எல்லா வீடுகளிலும் அந்தச் சாதனத்தைப் பொருத்தவேண்டும் என்று எரிசக்திச் சந்தை ஆணையமும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் தெரிவித்தன.
மின்சாரப் பாதுகாப்புச் சாதனத்தைப் பொருத்த வீட்டு உரிமையாளர்களுக்கு 2 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது.
பழைய, கெட்டுப்போன கம்பி வடங்களைக் கொண்ட மின்சாதனங்களால் ஏற்படக்கூடிய மின்சார அதிர்விலிருந்து பாதுகாக்க அந்தச் சாதனம் உதவும்.
1985ஆம் ஆண்டுக்குமுன் கட்டப்பட்ட ஓரறை, ஈரறை வீடுகளில் சாதனத்தைப் பொருத்துவதற்கான செலவை அரசாங்கம் ஏற்கும்.
குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு அந்த உதவி வழங்கப்படும்.