பிரித்தானியாவில் பணத்தை பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோர்!
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் நாட்டை விட்டு வெளியேற பணம் செலுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்துறை அலுவலகத்தின் உதவி தன்னார்வ திரும்பும் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஆலோசனையை தனிநபர்கள் பின்பற்றியுள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் பிரித்தானியாவை விட்டு தானாக வெளியேற விரும்புவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதேபோல் விமான டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.
இருப்பினும், புதிதாக வெளிவந்த சான்றுகள், பணத்தை பயன்படுத்திய சில சட்டவிரோத புலம்பெயர்ந்தோர்கள், நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் அயர்லாந்து வழியாக பிரித்தானியாவிற்கு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு பிரித்தானியாவிற்குள் மீண்டும் நுழைந்தவர்கள் சட்டவிரோத பணியில் ஈடுபடுபவது தொடர்பான பல சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது பிரித்தானியாவில் வரி செலுத்துவோரின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.





