கொழும்பு புறநகர் பகுதியில் சட்டவிரோத புனர்வாழ்வு நிலையம் சுற்றிவளைப்பு

தெஹிவளை பகுதியில் இயங்கி வருவதாக கூறப்படும் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அங்கு 34 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவித்தனர். இந்த மையத்தை நடத்தி வந்த நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் அனுமதியின்றி இங்கு போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த 34 பேரும் பாதுகாப்பு கருதி பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 22 times, 1 visits today)