ஒரு முனையில் சட்டவிரோத குடியேறிகள், மறுமுனையில் நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்! திண்டாடும் பிரித்தானியா!
பிரித்தானியாவில் இருந்து படித்த, தொழில்வாய்ப்பிற்காக காத்திருக்கும் பல இளைய தலைமுறையினர் நாட்டைவிட்டு வெளியேறும் போக்கு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அதிகரித்து வரும் வாடகைகள், கடினமான வேலைச் சந்தை மற்றும் ஊதிய உயர்வு வரம்பிற்கு உட்பட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணங்களால் படித்த இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஜூன் வரையிலான காலப்பகுதியில் 35 வயதுக்குட்பட்ட 195,000 பேர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் பலர், ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ஹாங்காங்கிற்கு குடிபெயர்ந்துள்ளனர். பெரும்பாலான இளைஞர்களின் முதல் தர தெரிவாக ஜப்பான் காணப்படுகிறது.
ஜப்பானிய மக்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, மற்றும் தூய்மை என்பன பலரை ஈர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வயதான பிரித்தானியர் வேலைக்காக டோக்கியோவிற்கு குடிபெயர்ந்ததாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
அதேநேரம் தொழிலதிபர்கள் பலர் துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் இலகுவாக கோல்டன் விசா திட்டத்தையும் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துபாய் வளர்ந்து வரும் தொழிலதிபர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.





